செய்திகள்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது - உலக வங்கி தகவல்

Published On 2018-10-08 04:41 GMT   |   Update On 2018-10-08 04:41 GMT
ஜி.எஸ்.டி. அமல் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. #WorldBank #IndianEconomy
வாஷிங்டன்:

தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல் போன்றவற்றால் ஏற்பட்ட தற்காலிக தடங்கல்களில் இருந்து இந்திய பொருளாதாரம் விடுபட்டு இருப்பது தெரிவதாகவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.



2017-18-ம் நிதியாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டி இருந்ததாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் இன்னும் வேகமெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ள இந்த அறிக்கை, நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை எட்டும் எனவும் கூறியுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு வலுவான தனியார் செலவினம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவை முக்கியமான காரணிகளாக இருக்கும் என கருதப்படுகிறது. #WorldBank #IndianEconomy

Tags:    

Similar News