செய்திகள்
விமான என்ஜினில் இருந்து தேனீக்கள் அகற்றப்படும் காட்சி.

தென் ஆப்பிரிக்க விமான என்ஜினில் கூடுகட்டிய தேனீக்கள் பத்திரமாக வெளியேற்றம்

Published On 2018-09-27 12:37 IST   |   Update On 2018-09-27 12:37:00 IST
தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரான டர்பன் விமான நிலையத்தில் விமான என்ஜினில் கூடுகட்டிய தேனீக்களை நிபுணர்கள் பத்திரமாக வெளியேற்றினர். #Bees #SouthAfricanPlanes
டர்பன்:

தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரான டர்பன் விமான நிலையத்தில் மேங்கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது என்ஜினில் இருந்து தேனீக்கள் வெளியே வந்து பறந்தன.

அதை பார்த்த விமானி ஒருவர் விமான என்ஜினில் சோதனை செய்தார். அங்கு தேனீ கூடு கட்டி இருந்தது தெரிய வந்தது. உடனே தேனீ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவை அங்கிருந்து அகற்றப்பட்டன. மொத்தம் 20 ஆயிரம் தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அங்கிருந்து புறப்பட வேண்டிய 3 பயணிகள் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமான என்ஜினில் தேனீக்கள் கூடு கட்டுவது இல்லை. இது மிகவும் அபூர்வமானது என நிபுணர்கள் தெரிவித்தனர். #Bees #SouthAfricanPlanes
Tags:    

Similar News