செய்திகள்

தான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

Published On 2018-09-20 23:56 GMT   |   Update On 2018-09-21 10:59 GMT
தான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. #LakeVictoriaFerryAccident
டூடூமா :

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும்.

தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 79 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. எனினும், 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஏரியில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #LakeVictoriaFerryAccident
Tags:    

Similar News