செய்திகள்

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி - உயிர் தப்பிய பெண் பயணி

Published On 2018-09-08 20:59 GMT   |   Update On 2018-09-08 20:59 GMT
நேபாளம் நாட்டின் காத்மாண்டு நகரில் இன்று 7 பேருடன் புறப்பட்டு சென்ற தனியார் ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியான நிலையில் பெண் பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். #Choppercrashes #NepalChoppercrash
காட்மாண்டு:

நேபாள நாட்டில் சமாகான் என்ற இடத்தில் இருந்து நேற்று காலை 7.40 மணிக்கு தலைநகர் காட்மாண்டு நோக்கி ஆல்டிடியூட் ஏர் ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு நோயாளியும், மேலும் 5 பயணிகளும் இருந்தனர். நிஷால் என்ற விமானி ஹெலிகாப்டரை ஓட்டினார்.

காலை 8 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது.



இந்த ஹெலிகாப்டர் காலை 8.18 மணிக்கு காட்மாண்டு போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டர் தாடிங், நுவாகாட் மாவட்டங்களையொட்டிய அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இந்த கோர விபத்தில், விமானி நிஷால் உள்ளிட்ட 6 பேர் பலியாகினர்.

உடனடியாக அங்கு மீட்பு படையினர் ராணுவ ஹெலிகாப்டரிலும், ஒரு தனியார் ஹெலிகாப்டரிலும் விரைந்தனர். லோ அனி டோல்மா என்ற பெண் பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பலியான 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. விசாரணை நடத்தப்படுகிறது.  #Choppercrashes #NepalChoppercrash
Tags:    

Similar News