செய்திகள்
கத்தியால் குத்தப்பட்ட ஜெர் போல்சோனரோ வலியால் துடிக்கும் காட்சி

பிரேசில் தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளருக்கு கத்திக்குத்து- வீடியோ

Published On 2018-09-07 06:15 GMT   |   Update On 2018-09-07 06:15 GMT
பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரத்தின் போது வேட்பாளரை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JairBolsonaro #Brazil
பிரேசிலியா:

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ (63) போட்டியிடுகிறார். இவர் சோசியல் லிபரல் கட்சியை சேர்ந்தவர்.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் முன்னணியில் இருக்கிறார். தற்போது தேர்தல் பிரசாரம் உச்சகட்ட நிலையில் உள்ளது.

மினாஸ் ஜெரேய்ஸ் மாகாணத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஏராளமானோர் கூடி அவரது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தனர். உண்ர்ச்சிமிகு உரையாற்றிக் கொண்டிருந்த அவர் கைகளை உயர்த்திய நிலையில் இருந்தார்.

அப்போது யாரோ ஒரு மர்ம நபர் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினான்.

இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார். அதை தொடர்ந்து அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரத்தம் அதிகமாக வெளியேறியதால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.



அதை தொடர்ந்து வயிற்றில் அவருக்கு 2 மணி நேரம் ஆபரேசன் நடத்தப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ளதாக அவரது மகன் பிளாவியோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே போல் சோனரோவை கத்தியால் குத்திய நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் அடெலியோ ஒபிஸ்போ டி ஒலி வேஸ்ரோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்துக்கு பிரேசில் அதிபர் மைக்கேல் டேமர், முன்னாள் அதிபர் லுலா டா சில்வா மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #JairBolsonaro #Brazil

Tags:    

Similar News