செய்திகள்

அமெரிக்கா - எமிரேட்ஸ் விமானத்தை தொடர்ந்து மேலும் 2 விமானங்களில் பயணித்த 12 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு

Published On 2018-09-06 22:07 GMT   |   Update On 2018-09-07 04:44 GMT
அமெரிக்காவில் எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 5-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை போன்று மேலும் 2 விமானங்களில் பயணித்த 12 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க்:

துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் நியூயார் ஜே.எப்.கே விமான நிலையத்தில் கடந்த 5-ம் தேதி தரையிறங்கியது. அதில் இருந்த சுமார் 521 பயணிகளில் 100-க்கும் அதிகமானவர்கள் தங்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீண்டும் எமிரேட்ஸ் விமான சம்பவத்தை போன்றே மேலும் 2 விமானங்களில் பயணித்த 12 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பாரிஸ் மற்றும் முனிச் நகரங்களில் இருந்து வந்த இரண்டு விமானங்கள் அமரிக்காவில் உள்ள பிலாடெல்பியா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் பயணித்த 250 பயணிகளில் 12 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தில் இருந்த 250 பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், விமான பயணிகளுக்கு எதற்காக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News