செய்திகள்

இத்தாலியில் நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்தில் 30 பேர் பலி

Published On 2018-08-14 17:39 IST   |   Update On 2018-08-14 20:22:00 IST
இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் விரைவு நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களுக்குள் இருந்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Genoaviaductcollapses
ரோம்:

இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையில் கான்கிரீட் தூண்களை அமைத்து அவற்றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடையில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன.

இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள A10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று திடீரென்று இடிந்து விழுந்தது.


அந்த பாலத்தின் சுமார் 200 மீட்டர் நீளத்திலான பகுதி சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்ததால் அப்போது அவ்வழியாக சென்ற பல கார்களும் லாரிகளும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. #Genoa #Genoaviaductcollapses
Tags:    

Similar News