செய்திகள்

பின்லேடன் பாதுகாவலருக்கு ஜெர்மனியில் அனுமதி மறுப்பு

Published On 2018-08-14 08:48 GMT   |   Update On 2018-08-14 08:48 GMT
20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தங்கியிருக்கும் பின்லேடன் பாதுகாவலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெர்லின்:

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது பாதுகாவலராக சமி ஏ என்பவர் இருந்தார். துனிசியா நாட்டை சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ளார். தனக்கு குடியுரிமை வழங்கும்படி அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் இவர் ஒரு பயங்கரவாதி என காரணம் கூறி அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவருக்கு மாதம் 1200 யூரோ உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் அவரை கடந்த மாதம் நாடு கடத்த ஜெர்மனி அரசு உத்தரவிட்டது. ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் தெரிவித்தார். இதனால் அவர் ஜெர்மனியில் தங்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அவரை தொடர்ந்து ஜெர்மனியில் தங்க அனுமதிக்க முடியாது. ஒரு பயங்கரவாதி என்று தெரிந்தும் அவரை நாட்டில் தங்க வைத்திருப்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கருதுகிறார். எனவே அவரை நாடு கடத்துவதற்கான அனுமதி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News