செய்திகள்

இதுக்கெல்லாமா பயப்படுவீங்க? - அணில் அச்சுறுத்துவதாக காவல்துறையில் புகார் செய்த ஜெர்மனி நபர்

Published On 2018-08-11 13:05 GMT   |   Update On 2018-08-11 13:05 GMT
ஜெர்மனி நாட்டில் அணில் குட்டி துரத்தியதற்கு பயந்து ஒருவர் போலீசாருக்கு போன் செய்து உதவி கேட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
பெர்லின்:

ஜெர்மனியில் கார்ல்ஸ்ருஹே என்ற நகரில் காவல் துறையினருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் மிகவும் நடுங்கிய குரலில் தன்னை அணில் குட்டி ஒன்று துரத்துவதாகவும், விரைவில் வந்து காப்பாற்றுமாறும் கோரியுள்ளார்.

இந்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் அதிவிரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இளைஞரை அணில் குட்டி ஒன்று மூர்க்கமாக துரத்துவதை கண்டனர். சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த அணில் குட்டி, சோர்வடைந்து துரத்துவதை விட்டுவிட்டது.

இதனால் அந்த நபர் நிம்மதி அடைந்து உள்ளார்.  அந்த அணில் குட்டியை காவல் துறையினர் மீட்டு அதற்கு கார்ல் என பெயரிட்டுள்ளனர். தற்போது, அது விலங்கு மையம் ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஒரு சிறு அணில் குட்டி துரத்தியதற்கு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News