செய்திகள்

கனடாவில் சீக்கியர் சுட்டுக்கொலை

Published On 2018-08-08 04:38 IST   |   Update On 2018-08-08 04:38:00 IST
கனடாவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
டொராண்டோ:

கனடாவில் வசித்து வந்தவர் ககன்தீப் சிங் தாலிவால் (வயது 19). சீக்கியரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குடும்பத்துடன் ஒரு திருமண விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து தனது வயதையொத்த நெருங்கிய உறவினர் ஒருவருடன் வெளியே புறப்பட்டு சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தி விட்டு தப்பிச்சென்றனர்.

அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு ககன்தீப் சிங் தாலிவாலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். படுகாயம் அடைந்த அவரது உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அப்போட்ஸ்போர்ட் போலீஸ் துறையினர் இதுபற்றி குறிப்பிடுகையில், “சம்பவத்தன்று இரவு 11.30 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் வந்தது. அங்கு நாங்கள் விரைந்தபோது 2 பேர் சுடப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது என தெரியவில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் நடந்து உள்ளது. தாலிவாலைத்தான் குறிவைத்து உள்ளனர் என்று தெரிகிறது” என்றனர்.

ககன்தீப்சிங் தாலிவால் குடும்ப நண்பர் ஜாஸ்கர்ன் சிங் தாலிவால், “எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. யாரோ வந்தார்கள். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு சென்று விட்டனர்” என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News