செய்திகள்

கணிதத்துறைக்கான மிக உயர்ந்த விருதை தட்டிச் சென்ற இந்திய வம்சாவளி ஆசிரியர்

Published On 2018-08-02 15:05 GMT   |   Update On 2018-08-02 15:05 GMT
கணிதத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஃபீல்ட்ஸ் பதக்கத்தை இந்திய வம்சாவளி ஆசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. #FieldsMedal #AkshayVenkatesh
பிரேசிலியா:

கணிதத்துறையில் மிக சிறப்பாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தும் மேதைகளுக்கு சர்வதேச கணித கூட்டமைப்பு சார்பில் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஃபீல்ட்ஸ் விருதுக்கு 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



அதில் அக்‌ஷய் வெங்கடேஷும் ஒருவர். அக்‌ஷய் தனது 2 வயதில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விழங்கிய அக்‌ஷய் தனது 20-வது வயதில் பி.எச்.டி பட்டத்தை வென்றார். இவர் தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

36 வயதான அக்‌ஷய் வெங்கடேஷ், கணிதத்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு காரணமாக ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றுள்ளார்.

நோபல் பரிசுக்கு இணையாக கணிதத்துறையில் இந்த ஃபீல்ட்ஸ் பதக்கம் கவுரவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #FieldsMedal #AkshayVenkatesh
Tags:    

Similar News