செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் மண்ணைக் கவ்விய பிரிவினைவாதம், பயங்கரவாத இயக்கங்கள்

Published On 2018-07-28 14:28 GMT   |   Update On 2018-07-28 14:28 GMT
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் படுதோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanGeneralPolls
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் 66 இடங்கள் மட்டுமே பெற்ற நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி எதிர்க்கட்சி ஸ்தானத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்ட பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கங்கள் மூலம் ஆதரிக்கப்பட்டவர்கள் படுதோல்வி அடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட ஜமாத் உல் தாவா இயக்கத்தின் ஆதரவு பெற்ற கட்சியின் வாக்காளர்கள் எவரும் வெற்றி பெற வில்லை என்றும், கோடிக்கணக்கில் பதிவான வாக்குகளில் 1 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் மட்டுமே அந்த வாக்காளர்கள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், சிந்து மாகாண தேர்தலில் போட்டியிட்ட பிரிவினை வாத கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களில் இருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதரீதியிலான கட்சிகள் கூட 5 ஆயிரம், 9 ஆயிரம் என சொர்ப்ப வாக்குகளில் தோல்வியை தழுவியதாக கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் கூடாரம் என உலக நாடுகளால் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டின் மக்கள் எவரும் பயங்கரவாதத்தையும், பிரிவினை வாத எண்ணம் கொண்ட தலைவர்களையும் ஏற்கவில்லை என்பது இந்த தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. #PakistanGeneralPolls
Tags:    

Similar News