செய்திகள்

சிறந்த உலகிற்கு தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை - மோடி

Published On 2018-07-26 15:59 GMT   |   Update On 2018-07-26 15:59 GMT
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேறு உரையாற்றிய பிரதமர் மோடி, சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என தெரிவித்தார். #PMModi #BRICS
ஜொகனஸ்பர்க் :

ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். 

மாநாட்டில் உரையாற்றிய மோடி, இன்றைய உலகம் எல்லா விதமான மாற்றங்களுக்கும் குறுக்கு வழியை தேடுகிறது. 

சிறந்த உலகை உருவாக்குவதற்கு தொழில்துறை தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் பலதரபட்ட ஒத்துழைப்பு போன்றவை அவசியம். எனவே அனைத்து நாடுகளும் அவர்களின் திறனையும்  கொள்கைகளையும் கண்டிப்பாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் எதிர்கால இளைஞர்களை தயார்படுத்தும் விதமாக தொழில்துறை உற்பத்தி, வடிவமைப்பு, உற்பத்தி போன்றவற்றுடன்  நமது பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

மேலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் பிரிக்ஸ் நாட்டை சேர்ந்த 20 கோடி தொழிலாளர்களின் நலனுக்கான உலகளாவிய பாதுகாப்புக் கட்டமைப்பை ஒன்றினைந்து உருவாக்க வேண்டும் எனவும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக விளங்குவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வலியுறுத்தினார். #PMModi #BRICS
Tags:    

Similar News