செய்திகள்

லாவேஸ் நாட்டில் அணை உடைந்து விபத்து - 19 பேர் பலி, பலர் மாயம்

Published On 2018-07-25 17:36 IST   |   Update On 2018-07-25 17:36:00 IST
லாவோஸ் நாட்டில் அணை உடைந்த விபத்தில் 6 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. #LaosDamCollapse
வியண்டியானே:

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸின் அட்டாபேயு மாகாணத்தில் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு புதிய அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. அணையின் கட்டுமானப்பணி 90 சதவிகிதம் முடிந்த நிலையில், அடுத்தாண்டு திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த திங்கள் அன்று மாலை அணையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால், தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெள்ளமாக உருவெடுத்து 6 கிராமங்களை மூழ்கடித்தது. இந்த விபத்தில் தற்போது வரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் 6600 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News