செய்திகள்

ருவாண்டா சென்றடைந்தார் மோடி - அதிபர் பால் ககமே உடன் சந்திப்பு

Published On 2018-07-23 19:54 GMT   |   Update On 2018-07-23 19:54 GMT
ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தில் முதல் பயணமாக ருவாண்டா சென்றடைந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பால் ககமேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #Rwanda, #PMModi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ளார்.   5 நாட்கள் சுற்றுப்பயணத்தின் முதல் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். ருவாண்டா தலைநகர் கிகாலி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த மோடியை அந்நாட்டின் அதிபர் பால் ககமே நேரில் சென்று வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து, பால் ககமே மற்றும் மோடி இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், இருவரும்  கூட்டாக பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, ’தன்னை அதிபர் ககமே விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்றது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். ருகாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளது. இதனால், பாஸ்போர்ட் மற்றும் விசா பெருவதற்கான வசதிகள் உருவாக்கப்படும். ருகாண்டாவின் பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பது பெருமை அளிக்கிறது’ என குறிப்பிட்டார்.

மேலும், இருநாடுகளுக்கும் இடையே தோல் மற்றும் விவசாயம் ஆராய்ச்சி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்திய பிரதமர் ஒருவர் ருவாண்டாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. #Rwanda #PMModi
Tags:    

Similar News