செய்திகள்

இந்திய மாணவர் கொலையில் தேடப்பட்ட நபரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசார்

Published On 2018-07-16 09:58 GMT   |   Update On 2018-07-16 09:58 GMT
அமெரிக்காவின் கென்சாஸ் நகரத்தில் இந்திய மாணவர் சரத் கோப்பு கொல்லப்பட்ட வழக்கில், தேடப்பட்ட நபரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
நியூயார்க்:

தெலுங்கானா மாநிலத்தின் வாரங்காலை சேர்ந்த 25 வயதான சரத் கோப்பு, அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கென்சாஸ் நகரத்தில் தங்கியிருந்து படித்து வந்தார். மேலும், அங்குள்ள உணவகம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த 6-ம் தேதி வழிப்பறி முயற்சியில் சரத் கோப்பு அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சரத்தைத் துப்பாக்கியால் சுட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், சந்தேக நபரின் உருவம் கொண்ட வீடியோவை போலீஸார் வெளியிட்டனர்.

மேலும், குற்றவாளியை கண்டுபிடிக்க இரண்டு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று தேடப்பட்டு வந்த நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த துப்பாக்கி சண்டையில் மூன்று போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News