செய்திகள்

நைஜீரியாவின் எக்கிட்டி மாநில கவர்னர் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி

Published On 2018-07-15 13:03 GMT   |   Update On 2018-07-15 13:03 GMT
நைஜீரியா பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எக்கிட்டி மாநிலத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் கயோடே ஃபயேமி வெற்றி பெற்றார். #Nigeriarulingparty #Ekiti #Ekitistatevote
அபுஜா:

மேற்காப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நைஜீரியா நாட்டின் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும் மாநில கவர்னர்கள் பதவிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அடுத்த தேர்தலிலும் போட்டியிடப் போவதாக தற்போதைய நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள எக்கிட்டி மாநில கவர்னர் பதவிக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. 

அதிபர் முஹம்மது புஹாரி தலைமையிலான மந்திரிசபையில் சுரங்கம் மற்றும் இரும்பு உற்பத்திதுறை மந்திரியாக பதவி வகித்த கயோடே ஃபயேமி, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் ஆல் பிராக்ரசிவ் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இந்த தேர்தலில் போட்டியிட்டார்.

கவர்னராக பதவி வகித்துவந்த அயோடெலே ஃபயோஸே அவரை எதிர்த்து எதிர்கட்சிகளின் ஒன்றான மக்கள் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கினார். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில்  ஆளும்கட்சி வேட்பாளர் கயோடே ஃபயேமி சுமார் 45 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றி எதிர்வரும் தேர்தல்களிலும் முஹம்மது புஹாரி தலைமையிலான கட்சியின் வெற்றிக்கு கிடைத்துள்ள அச்சாரமாக கருதப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Nigeriarulingparty #Ekiti #Ekitistatevote
Tags:    

Similar News