செய்திகள்

ஜப்பானில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

Published On 2018-07-07 11:48 GMT   |   Update On 2018-07-07 11:48 GMT
ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடந்த இருநாட்களாக கொட்டித் தீர்த்த தொடர் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீர்நிலைகளை மீறி கடந்து சென்று பல பகுதிகளை குளம்போல் சூழ்ந்துள்ளது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.

சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 16 அடி உயரம்வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவுக்குள் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை இன்று 38 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன சுமார் 50 பேரை தேடும் பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் மீட்பு குழுவினரின் ஹெலிகாப்டர் சேவையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டு கூரைகளின்மேல் அமர்ந்தவாறு வானத்தை உற்று நோக்கியவாறு காத்திருப்பதை காண முடிவதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #rainhitsJapan
Tags:    

Similar News