செய்திகள்

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் - 6-ம் தேதி வியன்னாவில் ஈரான், வல்லரசு நாடுகள் கூட்டம்

Published On 2018-07-03 10:32 GMT   |   Update On 2018-07-03 10:32 GMT
அமெரிக்கா விலகிய பின்னர் முதன்முறையாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கலந்துகொள்ளும் அணு ஆயுத தடை ஒப்பந்த ஆலோசனை கூட்டம் வியன்னா நகரில் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.
டெஹ்ரான்:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம் என இதில் கையொப்பமிட்டுள்ள இதர வல்லரசு நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா விலகிய பின்னர் முதன்முறையாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கலந்துகொள்ளும் அணு ஆயுத தடை ஒப்பந்த ஆலோசனை கூட்டம் வியன்னா நகரில் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.

பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முஹம்மது ஜாவத் ஸரிப் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Irannucleardeal #Viennanuclearmeet 
Tags:    

Similar News