செய்திகள்

அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் உயிரிழப்பு

Published On 2018-06-29 02:28 IST   |   Update On 2018-06-29 02:28:00 IST
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தீ கேப்பிட்டல்’ என்னும் தனியார் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #US #TheCapital #NewsPaperofficefiring

வாஷிங்டன்:

அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘தீ கேப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்த ஒரு நபர் அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்?, எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #US #TheCapital #NewsPaperofficefiring
Tags:    

Similar News