செய்திகள்

புதிய தலைவரை தேர்ந்தெடுத்த பாகிஸ்தானி தலிபான்கள்

Published On 2018-06-23 14:36 GMT   |   Update On 2018-06-23 14:36 GMT
பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தை அடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. #PakistaniTaliban
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் என்னும் பயங்கரவாத இயக்கம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த இயக்கத்தின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லா கொன்று வீழ்த்தப்பட்டார்.

இதையடுத்து தங்களது புதிய தலைமையை அந்த இயக்கம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த முகமது குரசானி கூறுகையில், முல்லா ஃபஷ்லுல்லா கொலை செய்யப்பட்டதை அடுத்து, தங்களது புதிய தலைவராக முப்தி நூர் வலி மஹ்சூத் என்பவரை புதிய தலைவராக நியமித்ததாகவும், முப்தி மசீம், அகா முப்தி ஹஃப்ஜுல்லா ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ##PakistaniTaliban
Tags:    

Similar News