செய்திகள்

கெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி

Published On 2018-06-15 10:11 GMT   |   Update On 2018-06-15 10:11 GMT
மனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் பழைய நினைவுகளை அழிக்கும் கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். #badmemories #badmemorieseraser
ஜெனிவா:

நமது வாழ்வில் முன்னர் சந்தித்த பயங்கர விபத்து, மனதை உலுக்கிய சில பிரிவுகள் போன்றவை நமது மூளையின் உட்பகுதியில் மிகவும் ஆழமாக பதிந்து நீங்காத பழைய நினைவுகளாக மீண்டும், மீண்டும் மேலெழுந்து, நமக்கு பதற்றமான சூழலையும், சோகமான மற்றும் பயங்கரமான அச்சமூட்டும் உணர்வுகளையும் ஏற்படுத்தி வருவதுண்டு.

இந்நிலையில், நமக்குள் இதைப்போன்ற பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் பதிவுகள் மனித மூளையில்
எந்த பகுதியில் சேமிக்கப்படுகின்றன? என்ற ஆராய்ச்சியில் தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதைதொடர்ந்து, நரம்பியல் சிகிச்சையால் பயத்தை மறக்கடிக்கும் பயிற்சியின் மூலம் மறுமுறை அதே எலிகளை பரிசோதித்தபோது, முன்பிருந்த அச்சவுணர்வு பெரும்பாலும் குறைந்து காணப்பட்டுள்ளது.



இதன்மூலம், மூளையின் ‘டென்ட்டேட் கய்ரஸ்’  dentate gyrus எனப்படும் நியூரான்களின் தொடர் செயல்பாட்டை மட்டுப்படுத்துவதன் வாயிலாக நம்மை வாட்டி வதைக்கும் பழைய நினைவுகளையும் அவற்றின் தாக்கத்தையும் விட்டு மனித சமுதாயத்தை விடுவிக்கலாம் என இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ஜோஹான்னெஸ் கிராஃப் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மறக்கடிக்கப்பட வேண்டிய பழைய நினைவுகளை அழிப்பதற்கு தேவையான கருவியை (மாற்று முறை) உருவாக்கும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் விரைவில் வெற்றிபெறும் என கருதப்படுகிறது. #badmemories #badmemorieseraser

Tags:    

Similar News