செய்திகள்

இந்தியாவின் அங்கமாக காஷ்மீர் இருப்பது போன்ற மேப் - பள்ளி புத்தகங்களுக்கு பாகிஸ்தான் தடை

Published On 2018-06-08 13:01 GMT   |   Update On 2018-06-08 13:01 GMT
முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போல சமூக அறிவியல் பாடத்தில் வரைபடம் இருந்ததை அடுத்து அந்த புத்தகங்களுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு தடை விதித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8-ம் வகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.

இந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News