செய்திகள்

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக இயங்கிய தங்கச் சுரங்கத்தில் விபத்து - 5 பேர் பலி

Published On 2018-06-04 17:09 IST   |   Update On 2018-06-04 17:09:00 IST
இந்தோனேஷியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஜகார்த்தா :

இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலவேசி பகுதியில் நேற்று கனமழை பொழிந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள பாகன் எனும் இடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் சரிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சுரங்கத்தில் வேலை செய்துவந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்தோனேஷிய பேரிடர் தடுப்பு அமைப்பு, ‘விபத்து நிகழ்ந்த பாகன் பகுதியில் தங்கத் தாது பூமிக்கடியில் அதிகளவில் உள்ளது. எனவே,  இப்பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று இரவு இப்பகுதியில் கனமழை பொழிந்ததையும் அவர்கள் பொருட்படுத்தாமல் சுரங்கத்தில் வேலை செய்துவந்ததால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News