செய்திகள்

அமெரிக்காவில் வெப்பமண்டல புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Published On 2018-05-28 10:40 GMT   |   Update On 2018-05-28 10:40 GMT
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வெப்பமண்டல புயல் காரணமாக அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். #Tropicalstorm #Alberto
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஆண்டு தோறும் புளோரிடா மாகாணத்தில் ஜூன் மாதம் புயல் சீசன் துவங்கும். இந்த ஆண்டு தற்போது ஆல்பர்டோ என்ற சூறாவளி புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. பனாமா நகரத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழையை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்பர்டோ புயல் வடக்கு நோக்கி நகரும்போது வலுவடைந்து வருவதாகவும், வெள்ள அபாயம் ஏற்பட உள்ளதாகவும் மியாமி புயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் பெயரிடப்பட்ட முதல் புயல் ஆல்பர்டோ ஆகும். இந்த புயலின் மூலம் மேற்கு ஜியார்ஜியா பகுதிகளில் சுமார் 30 செ.மீ அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் 60 முதல் 120 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tropicalstorm #Alberto

Tags:    

Similar News