செய்திகள்
கோப்புப்படம்

ஈராக்கின் பாக்தாத் நகரில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி

Published On 2018-05-24 10:45 IST   |   Update On 2018-05-24 10:45:00 IST
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் நேற்று இரவு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#Suicideattack
பாக்தாத்:

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.

மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
Tags:    

Similar News