செய்திகள்

மலேசியாவில் முதன்முதலாக மந்திரியாக சீக்கியர் பதவியேற்றார்

Published On 2018-05-22 15:06 IST   |   Update On 2018-05-22 15:06:00 IST
மலேசியா நாட்டு அரசியல் வரலாறில் முதல்முதலாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த கோபிந்த் சிங் டியோ என்பவர் மந்திரியாக நேற்று பதவியேற்றுள்ளார். #GobindSinghDeo #Sikhsworn #Malaysiacabinet
கோலாலம்பூர்:

மலேசியாவில் 1 லட்சம் சீக்கிய மதத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புசோங் தொகுதியில் சீக்கியரான கோபிந்த் சிங் டியோ போட்டியிட்டு 47,635 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், மஹாதிர் முகமது தலைமையிலான புதிய மந்திரி சபையில் கோபிந்த் சிங் டியோ நேற்று தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். மலேசிய வரலாற்றில் இந்திய வம்சாவளியில் வந்த சீக்கியர் மந்திரியாக பதவியேற்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழரான குலசேகரனுக்கு மனிதவளத்துறை மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. #GobindSinghDeo #Sikhsworn #Malaysiacabinet
Tags:    

Similar News