செய்திகள்

பாகிஸ்தானில் உள்ள கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க மாகாண அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு

Published On 2018-05-20 09:26 GMT   |   Update On 2018-05-20 09:26 GMT
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க மாகாண அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. #Pakistan #KrishnaTemple
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் ரவல்பிந்தி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் சேர்த்து ஒரே இந்து கோவிலாக கிருஷ்ணர் கோவில் இயங்கி வருகிறது. இந்த கோவில் 1897-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய கோவில் ஆகும். தற்போது இந்த கோவிலை புதுப்பிக்க அரசு முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அறக்கட்டளை சொத்து வாரியத்தின் முதன்மை நிர்வாகி முகமது ஆசிப் கூறுகையில், ‘கிருஷ்ணா கோவிலை புதுப்பிக்க வேண்டி, மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, அரசு ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கோவில் புணரமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தவுடன், அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வர இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #Pakistan #KrishnaTemple 
Tags:    

Similar News