செய்திகள்

அதிக வேலைப் பளு- ரூ.50 லட்சம் கேட்டு கோவில் மீது புத்த பிட்சு வழக்கு

Published On 2018-05-18 13:18 IST   |   Update On 2018-05-18 13:18:00 IST
அதிக வேலைப்பளு அளித்ததால் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என ஜப்பான் புத்த பிட்சு ஒருவர் கோவில் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
டோக்கியோ:

ஜப்பானில் மவுன்ட் கோயாவில் ‘கோயகன்’ என்ற புத்தர் கோவில் உள்ளது. இது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இங்கு பணிபுரியும் 40 வயது மதிக்கதக்க பிட்சு ஒருவர் தான் பணிபுரியும் இக்கோவில் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், "நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். இந்தநிலையில் 2015-ம் ஆண்டுவரை ஓய்வில்லாமல் தொடர்ந்து பணிபுரிந்து இருக்கிறேன்.

2015-ம் ஆண்டில் கோவில் நிர்வாகம் 1200-வது ஆண்டு விழாவை நடத்தியது. அப்போது 64 நாட்கள் ஓய்வின்றி தொடர்ந்து வேலை வாங்கினார்கள். எனவே எனக்கு கோவில் நிர்வாகம் ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இத்தகவலை புத்த பிட்சுவின் வக்கீல் நொரிடேக் ஷிராகுரா தெரிவித்தார். வழக்கு தொடர்ந்த புத்த பிட்சுவின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். #Tamilnews
Tags:    

Similar News