செய்திகள்

அமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமனம் - செனட் சபை ஒப்புதல்

Published On 2018-05-17 23:12 GMT   |   Update On 2018-05-17 23:19 GMT
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. #USSenate #GinaHaspel #CIAdirector

வாஷிங்டன்:

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறி மந்திரியாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் நியமித்தார். 

அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. ஜினா ஹேஸ்பெல் சி.ஐ.ஏ. இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் ஆவார். #USSenate #GinaHaspel #CIAdirector
Tags:    

Similar News