செய்திகள்

அமெரிக்காவில் 405 கோடி ரூபாய் மோசடி - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் கைது

Published On 2018-05-15 06:12 GMT   |   Update On 2018-05-15 06:12 GMT
அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் மூலம் 405 கோடி ரூபாய் மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #usindian #cryptocurrencyscam
நியூயார்க்:

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோக்ரப் சர்மா(27) தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து கிரிப்டோகரன்சி நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் பல வாடிக்கையாளர்களை கிரிப்டோகரன்சி திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

கிரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படுபவை. இது உலக அளவில் அதிகப் புழக்கத்தில் இருப்பது அமெரிக்காவில்தான். இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 60 மில்லியன் டாலர்( இந்திய மதிப்புக்கு 405 கோடி ரூபாய்) முதலீடாக பெற்றுள்ளனர்.



இந்நிலையில், முறையான அனுமதியின்றி பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த டிஜிட்டல் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு 65 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #usindian #cryptocurrencyscam
Tags:    

Similar News