செய்திகள்

கென்யாவில் அணை உடைப்பு - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

Published On 2018-05-12 02:11 IST   |   Update On 2018-05-12 02:11:00 IST
கென்யாவில் அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. #KenyaDamBurst
நைரோபி:

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கின.

முதல் கட்டமாக 41 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்தது.



இந்நிலையில், கென்யாவில் அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. 

இதுதொடர்பாக பேரிடர் மீட்பு அதிகாரிகள் கூறுகையில், நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளனர் என தெரிவித்தனர். #KenyaDamBurst
Tags:    

Similar News