செய்திகள்

மாஸ்கோவில் புதினை எதிர்த்துப் போராட்டம்: ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கைது

Published On 2018-05-05 12:49 GMT   |   Update On 2018-05-05 12:49 GMT
மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே இன்று போராட்டம் நடத்தச் சென்ற ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.#Moscowprotest #Russianoppositionleader #AlexeiNavalnydetained
மாஸ்கோ:

ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி வலியுறுத்தி வருகிறார்.

இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டு கொண்டுள்ளார். மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலெக்சி நவல்னி-யை புஷ்கின்ஸ்கயா சதுக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர்.

                                                            கோப்புப்படம்

இந்த தகவலை அலெக்சி நவல்னியின் நண்பரும் முக்கிய எதிர்கட்சி தலைவருமான லியோனிட் வால்கோவ் சமூகவலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.#Moscowprotest #Russianoppositionleader #AlexeiNavalnydetained
Tags:    

Similar News