செய்திகள்

பாக். அணுசக்தி மைய பணியாளர்கள் பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் - 2 பேர் பலி

Published On 2018-05-03 20:54 IST   |   Update On 2018-05-03 20:54:00 IST
பாகிஸ்தானில் அணுசக்தி மைய பணியாளர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் அடோக் மாவட்டத்தில் அணுசக்தி மைய பணியாளர்களை அழைத்துக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு பைக்கில் வந்த பயங்கரவாதி தனது கையிலிருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். மேலும், வெடிகுண்டுகளையும் வீசினார்.

இந்த திடீர் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர். மேலும், 12-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பேருந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பஞ்சாப் மாகாண முதல் மந்திரி ஷாபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. #Tamilnews

Similar News