செய்திகள்

உடலில் இருந்து அகற்றப்பட்டும் உயிருடன் இருக்கும் பன்றி மூளைகள்- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Published On 2018-04-28 10:11 GMT   |   Update On 2018-04-28 10:11 GMT
உடலில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட மூளைகள் 36 மணிநேரம் உயிருடன் இருந்தன. இது மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. #PigBrains
வாஷிங்டன்:

அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழக நிபுணர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்ட பன்றிகளின் மூளையை பல மணிநேரம் உயிருடன் இருக்கச் செய்ய ஆய்வகத்தில் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

பன்றியின் உடலில் இருந்து அகற்றப்பட்ட மூளையை அதன் உடல் வெப்பநிலையிலேயே வைத்து இருந்தனர். மேலும் மூளை உயிரிழக்காமல் இருக்க செயற்கை ரத்தம் பம்ப் மூலம் ஒரே சீராக செலுத்தப்பட்டது. உடலின் வெப்பநிலையை மூளைக்கு வழங்க ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறு பாதுகாக்கப்பட்ட மூளைகள் 36 மணிநேரம் உயிருடன் இருந்தன. இது மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.


மனிதர்கள் இறந்தபிறகு அவர்களது மூளையை வேறு ஒருவருக்கு பொருத்த இது ஒரு முன்னோடி ஆய்வாக கருதப்படுகிறது. மேரிலேண்ட் பெதஸ்தாவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் மூளை குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது. அதில் இந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த ஆய்வை பேராசிரியர் செஸ்டான் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அவர்கள் 100 பன்றிகளின் மூளைகளை ஆய்வு நடத்தி வெற்றி கண்டுள்ளனர். #PigBrains
Tags:    

Similar News