செய்திகள்

பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை- குழந்தைகள் ஆபாச பட வழக்கில் அதிரடி தீர்ப்பு

Published On 2018-04-28 02:55 GMT   |   Update On 2018-04-28 02:55 GMT
குழந்தைகள் ஆபாச பட வழக்கில் பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து லாகூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை சேர்ந்தவர் சதத் அமின். இவர், குழந்தைகளை தொடர்புபடுத்தி ஆபாச படங்கள் எடுத்து, அந்தப் படங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் இப்படி குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பதை கிரிமினல் குற்றம் என ஆக்கி சட்டம் இயற்றினர். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நார்வே தூதரகம் செய்த புகாரின்கீழ், அமின் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6½ லட்சம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக அவர் மீது லாகூர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அமின் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்தது. மேலும், அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

பாகிஸ்தானில் குழந்தைகள் ஆபாச பட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் பாகிஸ்தானியர் என்ற பெயர் அமினுக்கு கிடைத்து உள்ளது. அமினுக்கு லாகூர் கோர்ட்டு ரூ.12 லட்சம் அபராதமும் விதித்து உள்ளது. 
Tags:    

Similar News