செய்திகள்

அடுத்த ஆண்டு இந்தியாவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை - சீன அதிபருக்கு மோடி அழைப்பு

Published On 2018-04-27 12:01 GMT   |   Update On 2018-04-28 03:44 GMT
இந்தியா - சீனா இடையிலான உயர்மட்ட உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க சீன அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். #Modi #XiJinping #summitinIndia
பீஜிங்:

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் நான்காவது முறையாக தற்போது சீனா சென்றுள்ளார்.
தோக்லாம் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இன்று வுஹான் நகரில் சீன பிரதமர் ஜி ஜின்பிங்-வுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என இந்த ஆலோசனையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அடுத்த 2019-ம் ஆண்டு இதுபோன்ற உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அவர் குறிப்பிட்டபோது சீன அதிபரும் மகிழ்ச்சியுடன் இந்த கருத்தை ஆமோதித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் நாம் நிறைய சாதித்துள்ளோம். பலமுறை நாம் சந்தித்துள்ளோம். உங்களுடன் மேலும் ஆழ்ந்த தொடர்பை வளர்ப்பதன் மூலம் இந்தியா-சீனா இடையிலான நட்புறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான புரிதலை நாம் ஏற்படுத்திகொள்ள முடியும் என ஜி ஜின்பிங் குறிப்பிட்டார். #tamilnews #Modi #XiJinping #summitinIndia
Tags:    

Similar News