செய்திகள்

பிரிட்டன் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ஏப். 9-13 வரை சமோசா வாரம்

Published On 2018-03-25 15:46 IST   |   Update On 2018-03-25 16:08:00 IST
பிரிட்டன் நாட்டில் லண்டன் உட்பட சில முக்கிய பெருநகரங்களில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை முதல் முறையாக சமோசா வாரமாக கொண்டாடப்பட உள்ளது. #UK #NationalSamosaWeek

லண்டன்:

பிரிட்டன் நாட்டில் லண்டன் உட்பட சில முக்கிய பெருநகரங்களில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை முதல் முறையாக சமோசா வாரமாக கொண்டாடப்பட உள்ளது.

அதன்படி இந்திய மக்கள் அதிகம் வாழும் பெருநகரங்களில் இந்த சமோசா வாரம் கொண்டாடப்பட உள்ளது. பிர்மிங்காம், மான்செஸ்டர், கொவெண்ட்ரி, நாட்டிங்காம்ஷைர், ராட்லெட் ஆகிய நகரங்களில் கொண்டாடப்பட உள்ளது.

அதற்காக அந்நகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சமோசா வாரத்தின் போது சமோசா உண்ணும் போட்டி நடத்தப்பட உள்ளது. மேலும் சிறந்த சமோசா செய்பவர்களுக்கு விருதும் வழங்கப்பட உள்ளது. சமோசா கடைகள் அமைப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிகளின் போது வசூலாகும் தொகை, நலத்திட்ட செயல்களுக்காக பயன்படுத்தப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். #UK #NationalSamosaWeek #tamilnews

Similar News