செய்திகள்
போர்ச்சுக்கல் நாட்டில் குடிபோதையில் விமானம் ஓட்ட தயாரான விமானி கைது
போர்ச்சுக்கல் நாட்டில் குடிபோதையில் விமானம் ஓட்ட தயாரான விமானியை போலீசார் கைது செய்தனர்.
லிஸ்பன்:
போர்ச்சுக்கல் நாட்டில் ஸ்டட்கார்ட் நகரில் இருந்து லிஸ்பனுக்கு ‘போர்ச்சுக்கல் ஏர்லைன்’ விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அதில் 106 பயணிகள் இருந்தனர்.
அப்போது விமானத்தை ஓட்ட என்ஜின் அறைக்கு 2 விமானிகள் வந்தனர். அவர்களில் ஒருவர் அதிக அளவில் மது அருந்தி குடிபோதையில் இருந்தார்.
அவரால் சரியாக நடக்க கூட முடியவில்லை. தள்ளாடிய நிலையில் வந்தார். அது குறித்து விமானநிலைய போலீசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதை தொடர்ந்து விமானத்தின் என்ஜின் அறைக்கு சென்ற போலீசார் குடிபோதையில் தள்ளாடிய விமானியை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அதை தொடர்ந்து குடிபோதை விமானி ரூ.2 லட்சம் பிணைத்தொகையில் ஜாமீனில் விடப்பட்டார். விமானி குடிபோதையில் இருந்ததால் ஸ்டட்கார்ட்டில் இருந்து லிஸ்பன் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. #tamilnews