செய்திகள்
மதுபோதையில் இருந்தபோது ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? புதிய தகவலால் பரபரப்பு
நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என துபாயின் பிரபல ஊடகம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. #Sridevi
துபாய்:
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை இன்று பிற்பகல் வெளியானது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயின் பிரபல ஊடகமான ‘கல்ஃப் நியூஸ்’ இணையதளம் மாறுபட்ட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sridevi #RIPSridevi #TamilNews