செய்திகள்

லைபீரியா அதிபராகும் முன்னாள் கால்பந்து வீரர்

Published On 2017-12-29 09:18 GMT   |   Update On 2017-12-29 09:18 GMT
தேர்தலில் வெற்றி பெற்றதால் லைபீரியா நாட்டு அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேக் பதவியேற்கிறார்.
மான்ரோவியா:

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள குட்டி நாடு லைபீரியா. இங்கு சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ஜார்ஜ் வேக் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோசப் போகையை விட 60 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றார்.

அதை தொடர்ந்து இவர் லைபீரியாவின் புதிய அதிபராகிறார். இவர் முன்னாள் கால்பந்து வீரர் ஆவார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து தீவிர அரசியலில் நுழைந்து லைபீரியா பாராளுமன்றத்தில் செனட்டர் ஆனார்.

இவர் வெற்றியை அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் லைபீரியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Tags:    

Similar News