செய்திகள்

ஏழை - நடுத்தர வருவாய் நாடுகளில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி போலி மருந்துகள் விற்பனை

Published On 2017-11-29 13:20 IST   |   Update On 2017-11-29 13:21:00 IST
ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டன்:

மக்களின் நோய்களை தீர்க்க உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்படும் இவை ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது.

அவ்வாறு விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரையில் 10 சதவீதம் போலியானவை அல்லது நம்பகத்தன்மை இல்லாதவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சார்பில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறை கடந்த 2013-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது சர்வதேச அளவில் 3 கட்டமாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது 1500 தயாரிப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முடிவில் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளின் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவது கண்டுடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News