செய்திகள்

டிஆர் காங்கோவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 30 பேர் பலியானதாக தகவல்

Published On 2017-09-30 14:06 GMT   |   Update On 2017-09-30 14:06 GMT
டிஆர் காங்கோ நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில், 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கின்ஷாசா:

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் (டிஆர் காங்கோ) ராணுவத்துக்கு சொந்தமான போக்குவரத்து விமானம், இன்று காலை தலைநகர் கின்ஷாசாவில் உள்ள நிடோலோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அதில் சுமார் 30 வீரர்கள் பயணம் செய்தனர். 2 வாகனங்கள், ஆயுதங்களும் அதில் கொண்டு செல்லப்பட்டன.

சுமார் 100 கி.மீ. தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நீல் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ராணுவம் மற்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், விமானத்தில் பயணித்த ஒருவரும் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

விமானம் தரையை நோக்கி பாய்ந்து வந்ததை பார்த்ததாகவும், ஆனால் விழுந்த இடத்தில் தீப்பிடித்ததற்கான புகை எதுவும் வரவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News