செய்திகள்

இஸ்ரேலில் முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்தியர்களின் கல்லறைக்கு மோடி அஞ்சலி

Published On 2017-07-06 10:11 GMT   |   Update On 2017-07-06 10:11 GMT
இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் கல்லறைக்கு சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெருசலேம்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக கடந்த புதன்கிழமை மாலை இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேம் சென்றார். மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தனது பயணத்தின் முக்கிய நிகழ்வுகளாக, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அதிபர் ரிவ்லினை சந்தித்த மோடி, டெல் அவிவ் நகரில் வாழும் சுமார் 4 ஆயிரம் இந்திய வம்சாவளியினரிடையே மோடி உரையாற்றினார்.

இந்நிலையில், தனது பயணத்தின் இறுதி நாளான இன்று இஸ்ரேல் நாட்டில் உள்ள முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் கல்லறைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அதேபோல் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் இந்திய வீரர்களின் கல்லறைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


கல்லறைக்கு செல்லும் முன்பு பேசிய மோடி, முதலாம் உலகப் போரில் ஹாய்பா நகரின் விடுதலைக்காக போரிட்டு உயிரிழந்த 44 இந்திய வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் இது என்றார்.

ஹாய்பா விடுதலைக்கான போரில் ஹீரோவாக திகழ்ந்த இந்தியாவின் மேஜர் தல்பட் சிங்கிற்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை மோடி மற்றும் நேதன்யாகு இருவரும் பார்வையிட்டனர்.



இதனிடையே, இந்திய வீரர்களின் கல்லறை மற்றும் நினைவுச் சின்னங்களை பார்வையிட்ட பின்னர் பிரதமர்கள் இருவரும் அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதினை கழித்தனர்.



Tags:    

Similar News