செய்திகள்

பாரீஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி: பயணிகள் வெளியேற்றம்

Published On 2017-07-02 06:29 GMT   |   Update On 2017-07-02 06:29 GMT
பாரீஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட வெடி குண்டு பீதியால் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ரோசி-சார்லஸ் டிகயூலி விமான நிலையம் உள்ளது. இது பாரீசில் உள்ள முக்கிய விமான நிலையமாகும். இது ஐரோப்பிய கண்டத்தின் 2-வது மிகப் பெரிய விமான நிலையமாகும். இங்கு 1 லட்சத்து 80 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டன.

விமான நிலையத்தில் இருந்த 2 ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 20 விமானங்களின் போக்குவரத்து தாமதமானது.

இதற்கிடையே விமான நிலையம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு சோதனையிட்டனர். ஆனால் அங்கு வெடி குண்டுகளோ, மர்ம பொருளோ சிக்கவில்லை.

பிரான்சில் சமீபகாலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 18 மாதங்களில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News