செய்திகள்

நியூயார்க்: பாதசாரிகள் மீது கார் பாய்ந்ததில் ஒருவர் பலி : தீவிரவாத தாக்குதலா? போலீஸ் விசாரணை

Published On 2017-05-18 18:21 GMT   |   Update On 2017-05-18 18:21 GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதசாரிகள் மீது கார் வேகமாக மோதியதில் ஒருவர் பலியாகினார். மேலும், 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதசாரிகள் மீது கார் வேகமாக மோதியதில் ஒருவர் பலியாகினார். மேலும், 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் வணிக தலைநகரமான நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் நவ் சதுக்கத்தில் இன்று பாதசாரிகள் சாலையை கடக்கும் போது கார் ஒன்று வேகமாக அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், இது ஒரு எதிர்பாராமல் நடந்த விபத்து தான் என நகர போலீசார் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசாரின் விளக்கங்களை ஏற்றுள்ளதாகவும், நகரின் அனைத்து பகுதிகளும் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News