செய்திகள்

போர்ச்சுக்கலில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது: 5 பேர் பலி

Published On 2017-04-18 12:13 IST   |   Update On 2017-04-18 12:13:00 IST
போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே குட்டி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

லிஸ்பன்:

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பன் அருகேயுள்ள விமான நிலையத்தில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டது. அதையடுத்து சிறிது நேரத்தில் லிஸ்பனில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தரையில் விழுந்து நொறுங்கியது.

அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட 4 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். அவர்களில் விமானி சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர். 3 பயணிகள் பிரான்சை சேர்ந்தவர்கள். இதற்கிடையே விமானம் கீழே விழுந்த போது சூப்பர் மார்க்கெட் முன்பு லாரியில் ஒருவர் சரக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்.


அப்போது அவர் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் அவரும் காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

Similar News