செய்திகள்

டிரம்பின் முக்கிய கொள்கையை மீறிய மகள் இவாங்கா டிரம்ப்

Published On 2017-03-12 17:58 IST   |   Update On 2017-03-12 17:58:00 IST
அமெரிக்க தயாரிப்பு பொருட்களையே வாங்குவோம் என்பதை தனது முக்கிய கொள்கையாக முழங்கிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவங்கா டிரம்ப், சீனாவில் இருந்து 53 டன் அளவிலான சீனத் தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்துள்ளார்.
பெய்ஜிங்:

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களையே அமெரிக்கர்கள் வாங்க வேண்டும் என முழங்கினார். அவரது வெற்றிக்கு இந்த முழக்கமும் ஒரு காரணமாக இருந்தது.

கொள்கை கோட்பாடு எல்லாம் மக்களுக்கு மட்டும்தான் குடும்பத்தினருக்கு கிடையாது என்கிற மரபின் படி டிரம்பின் மகள் இவாங்கா சீனாவில் இருந்து 53 டன் அளவில் தன்னுடைய நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்துள்ளார். இவை அனைத்தும் சீனத் தயாரிப்பு பொருட்கள் ஆகும்.



இவாங்கா டிரம்ப் அமெரிக்காவில் பேஷன் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இதற்கான பொருட்களைத்தான் சீனாவில் இருந்து சுமார் எட்டு கன்டைனர்களில் இறக்குமதி செய்திருக்கிறார்.  மேலும், டிரம்ப் குடும்பத்தினர் நடத்தும் தொழில்களுக்கு தேவையான பல பொருட்கள் சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கவினருக்கு வழங்கும் வேலை வாய்ப்புகளை சீனா திருடி வருகிறது என டிரம்ப் தனது பிரச்சாரத்தின் போது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News