செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

Published On 2017-01-18 21:19 IST   |   Update On 2017-01-18 22:19:00 IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு:

ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர், கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து கொண்டே வருகின்றது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அண்டை நாடான இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாலை 4 மணி முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

முன்னதாக, ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. அதேபோல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Similar News