செய்திகள்

கிர்கிஸ்தானில் துருக்கி விமானம் குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது: 32 பேர் பலி

Published On 2017-01-16 05:47 GMT   |   Update On 2017-01-16 05:47 GMT
கிர்கிஸ்தானில் துருக்கி சரக்கு விமானம் தரை இறங்கியபோது குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலியாகினர்.
பிஸ்கெக்:

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் இருந்து கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்குக்கு துருக்கில் ஏர்லைன் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. அது ஹாங்காங் வழியாக பிஸ்கெக் பகுதியை வந்தடைந்தது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு அங்கு தரை இறங்கியது. அப்போது கடுமையான பனி மூட்டம் இருந்தது. அதனால் தவறுதலாக பிஸ்கெக் அருகேயுள்ள டசா-சூ கிராமம் அருகே இறங்கியதால் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 32 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேர் விமானிகள். இத்தகவலை கிர்கிஸ்தானின் அவசர சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Similar News